வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் மழை பெய்தது.

0 2708
வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் மழை பெய்தது.

வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் மழை பெய்தது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் பெய்த இடியுடன் கூடிய கனமழையால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. நெல்கொள்முதல் நிலையங்களில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான டன் நெல்மூட்டைகள் நனைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

அரியலூர், ஜெயங்கொண்டம், டி.பழூர் உள்பட அரியலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று மாலையிலிருந்து பெய்த பலத்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

வேளாங்கண்ணி, திருப்பூண்டி, கீழ்வேளுர் உள்ளிட்ட நாகை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

சம்பா சாகுபடி விவசாயிகளுக்கு மழை மகிழ்ச்சியை தந்தாலும், குறுவை சாகுபடியில் அறுவடைக்கு தயாரான நெற்பயிற்கள் பாதிப்படைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments