நாடு தழுவிய அளவில் நடத்தப்படும் நீட் தேர்வில், ஏன் இத்தனை குளறுபடிகள்? - மு.க.ஸ்டாலின் கேள்வி

0 2203
நாடு தழுவிய அளவில் நடத்தப்படும் நீட் தேர்வில், ஏன் இத்தனை குளறுபடிகள்? - மு.க.ஸ்டாலின் கேள்வி

நாடு தழுவிய அளவில் நடத்தப்படும் ஒரு நுழைவுத் தேர்வில், ஏன் இத்தனை குளறுபடிகள்? குழப்பங்கள்? என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களில் 23,468 பேர் தேர்வே எழுதவில்லை, தேர்வு எழுதிய 99,610 பேரில் 57,215 பேர் மட்டுமே வெற்றி பெற்றுள்ளார்கள, கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது 2,570 பேர் குறைவாகவே நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

நீட் தேர்வினை இந்திய அளவில் 79 சதவீதம் பேர் ஆங்கில மொழியிலும், 12.80 சதவீதம் பேர் மட்டுமே இந்தி மொழியிலும் எழுதியிருப்பதாக திமுக தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

நீட் தேர்வு முடிவுகள் முதலில் தவறாக வெளியிடப்பட்டதையும், மதிப்பெண்கள் குறைந்ததாக ஏராளமான மாணவர்கள் புகார் அளித்துக் கொண்டிருப்பதாகவும் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments