சர்வ மங்களம் பொங்கும் நவராத்திரித் திருவிழா

0 587
சர்வ மங்களம் பொங்கும் நவராத்திரித் திருவிழா

நாடு முழுவதும் நேற்று நள்ளிரவு முதல் நவராத்திரி கொண்டாட்டம் தொடங்கியுள்ளது. இதனை முன்னிட்டு முக்கிய அம்மன் கோவில்களில் பக்தர்கள் திரண்டனர்.

பெண்ணால் மட்டுமே தனது மரணம் நேர வேண்டும் என்று மகிஷாசுரன் வரம் பெற்றிருந்த நிலையில், அம்பிகை அவனை வதம் செய்ததாகக் கூறப்படும் வெற்றிக்குரிய நன்னாள் விஜயதசமியாக கொண்டாடப்படுகிறது.

நவராத்திரியின் ஒன்பது நாட்களும் முப்பெரும் தேவியரை வணங்கும் நவராத்திரியாகக் கொண்டாடப்பட்டு பக்தர்கள் சக்தி வழிபாடு செய்து விரதம் இருக்கின்றனர்.

நவராத்திரி விழா நேற்று இரவு கோலாகலமாகத் தொடங்கியது.கோவில்களில் ஒன்பது நாட்களுக்கு எரியும் அணையா விளக்குகள் ஏற்றி வைக்கப்பட்டன. தமிழ்நாட்டில் வீடுகளில் கொலு வைத்து மக்கள் நவராத்திரியைக் கொண்டாடுகின்றனர். 

கொரோனா காலத்தின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ,வழிகாட்டல்களைப் பின்பற்றுமாறு பக்தர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர் .டெல்லியின் ஜான்டேவாலன் ஆலயத்தில் நவராத்திரி கொண்டாட்டம் களை கட்டியது.

இதே போன்று டெல்லியின் சத்தர்புர் கோவில் உள்பட அனைத்துக் கோவில்களிலும் பக்தர்களின் வெப்ப நிலை பரிசோதித்தல், கைகளை சானிட்டைசர் மூலம் சுத்தப்படுத்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments