திருப்பதி கோவிலில் தொடங்கியது நவராத்திரி பிரம்மோற்சவ விழா

0 532
திருப்பதி கோவிலில் தொடங்கியது நவராத்திரி பிரம்மோற்சவ விழா

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா தொடங்கியது.

அந்த கோவிலில் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் நவராத்திரி பிரம்மோற்சவ விழாவின் முதல் நிகழ்ச்சியாக
காலை 9 மணியில் இருந்து காலை 10 மணிவரை வஜ்ர கவச ஆபரணத்தில் தங்கத் திருச்சி வாகனத்தில் மலையப்ப சாமி காட்சி தந்தார்.

நாளை காலை சிறிய சேஷ வாகனத்திலும், இரவு ஹம்ச வாகனத்திலும் மலையப்பசாமி எழுந்தருளுகிறார். தொடர்ந்து
24-ந்தேதி வரை விழா நடைபெறுகிறது.

விழாவில் மலையப்பசாமி தனித்தும், உபய நாச்சியார்களுடன் சேர்ந்தும் வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments