டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் போட்டியின் முதல் சுற்றில் இந்திய வீரருக்கு வெற்றி

0 1355
டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் வெற்றி பெற்றார்.

டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் வெற்றி பெற்றார்.

5 கோடி ரூபாய் பரிசுத்தொகைக்கான டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் போட்டி அங்குள்ள ஒடென்ஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆடவர் ஒற்றையர் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில்  இந்திய வீரர் ஸ்ரீகாந்த் 21-12, 21-18 என்ற நேர்செட்டில் இங்கிலாந்து வீரர் டாபி பென்டியை தோற்கடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீரர் அஜய் ஜெயராம் 12-21, 14-21 என்ற நேர்செட்டில் டென்மார்க் வீரர் ஆன்டர்ஸ் ஆன்டென்சனிடம் தோல்வி கண்டு வெளியேறினார். இதேபோல் இந்திய வீரரான சுபாங்கர் தேவ் 13-21, 8-21 என்ற நேர்செட்டில் கனடா வீரர் ஜாசன் அந்தோணியிடம் வீழ்ந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments