மேற்குத் தொடர்ச்சி மலைகளில் பெய்யும் கனமழையால் பாபநாசம் அணையில் 7 அடியும், சேர்வலாறு அணையில் 9 அடியும் நீர்மட்டம் உயர்வு

0 644
மேற்குத் தொடர்ச்சி மலைகளில் பெய்யும் கனமழையால் பாபநாசம் அணையில் 7 அடியும், சேர்வலாறு அணையில் 9 அடியும் நீர்மட்டம் உயர்வு

நெல்லை மாவட்டம் பாபநாசம் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 7 அடியும் சேர்வலாறு அணையின் நீர் மட்டம் 9 அடியும் உயர்ந்துள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலைகள் மற்றும் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக நெல்லை மாவட்டத்தின் பிரதான அணைகளில் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், மொத்தம் 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர்வரத்து வினாடிக்கு 5 ஆயிரத்து 940 ஆக அதிகரித்து, நீர்மட்டம் 101 புள்ளி 40 அடியாக உயர்ந்துள்ளது.

156 அடி கொள்ளவு கொண்ட சேர்வலாறு அணையின் நீர் மட்டம் 122 புள்ளி 64 அடியாகவும், மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 70 புள்ளி 90 அடியாக உயர்ந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments