ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஐ.பி.எல். போட்டியில் டெல்லி அணி வெற்றி... புள்ளிப் பட்டியலில் மீண்டும் முதலிடத்துக்கு முன்னேற்றம்

0 1654
ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஐ.பி.எல். போட்டியில் டெல்லி அணி வெற்றி... புள்ளிப் பட்டியலில் மீண்டும் முதலிடத்துக்கு முன்னேற்றம்

ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணியை 13 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற டெல்லி அணி, புள்ளிப்பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்தது.

டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அதிரடியாக ஆடிய ஷிகர் தவான் 57 ரன்களும், ஷ்ரேயாஸ் அய்யர் 53 ரன்களை சேர்க்க, டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில், 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 161 ரன்களை சேர்த்தது.

இதையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணியில் அதிகபட்சமாக பென் ஸ்டோக்ஸ் 41 ரன்களை சேர்க்க, அடுத்து வந்த வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுக்களை பறிகொடுத்தனர். 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 148 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வியுற்றது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments