வளரும் நாடுகள் கோவிட் தடுப்பூசிகளை சரிசமமாக பகிர்ந்துகொள்ள வேண்டும் - இந்தோனேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் வலியுறுத்தல்

0 1077
வளரும் நாடுகள் கோவிட் தடுப்பூசிகளை சரிசமமாக பகிர்ந்துகொள்ள வேண்டும் - இந்தோனேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் வலியுறுத்தல்

வளரும் நாடுகள் கோவிட் தடுப்பூசிகளை சரிசமமாக பகிர்ந்துகொள்ள வேண்டும் என இந்தோனேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் ரெட்னோ மர்சுதி வலியுறுத்தியுள்ளார்.

கொரோனா தடுப்பூசிகளை பணக்கார நாடுகள் வாங்கிக் குவிப்பதால் வளரும் நாடுகளின் கதி என்னவாகும் என கேள்வி எழுப்பிய அவர், பாதுகாப்பான மற்றும் மலிவான தடுப்பூசிகள் அனைவரையும் சென்றடைய வளரும் நாடுகளுடன் பணக்கார நாடுகள் இணைந்து செயல்படுவது அவசியம் என்றார்.

உலக மக்கள்தொகையில் 13 சதவீதத்தை கொண்ட பணக்கார நாடுகள், இனி வரவிருக்கும் தடுப்பூசிகளில் 50 சதவீதத்திற்கு அதிகமானவற்றை வாங்க திட்டமிட்டுள்ளதாக அறிக்கை ஒன்று வெளியானதையடுத்து அவர் இக்கருத்துகளை கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments