தேமுதிக நிறுவனர் விஜயகாந்த், நடிகர் தனுஷ் வீட்டிற்கு விடுத்த வெடிகுண்டு மிரட்டல் புரளி என தகவல்

0 1699
தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் மற்றும் நடிகர் தனுஷ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து, வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டனர்.

தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் மற்றும் நடிகர் தனுஷ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து, வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டனர்.

காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு மர்மநபர் மிரட்டல் விடுத்ததை தொடர்ந்து, சென்னை ஆர்ஏ புரம் மற்றும் விருகம்பாக்கத்திலுள்ள வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. அதில்,வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது.

விசாரணையில் விழுப்புரம் மாவட்டம் மரக்கணத்தைச் சேர்ந்த புவனேஷ்வர் என்ற நபர் தான் மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. மனநலம் பாதிக்கப்பட்ட அந்த நபர் ஏற்கனவே நடிகர் விஜய், அஜித், ரஜினி வீடுகளுக்கு மிரட்டல் விடுத்திருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments