பெங்களூருவில் சகோதரியின் தற்கொலைக்கு காரணமான அவரது கணவரை கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்த இளைஞர்

0 2607
பெங்களூருவில் சகோதரியின் தற்கொலைக்கு காரணமான அவரது கணவரை கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்த இளைஞர்

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் பட்டப்பகலில் சகோதரியின் தற்கொலைக்கு காரணமான அவரது கணவரை கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்த சம்பவத்தின் பதபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

ஆடுகோடி பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்பவரின் மனைவி ஜாஸ்மின், கணவர் அடிக்கடி தகராறில் ஈடுபடுவதாக தம்பி ஜான்பாலிடம் செல்போனில் கூறிவிட்டு கடந்த 21-ம் தேதி தற்கொலை செய்து கொண்டார்.

இந்த நிலையில், சகோதரியை இழந்த துக்கம் தாளாமல் அதற்கு காரணமாக இருந்த கணவர் ராஜேஷை, தம்பி ஜான்பால் நண்பருடன் சேர்ந்து பட்டப்பகலில் ஓட ஓட விரட்டி கத்தியால் சரமாரியாக 30 முறைக்கும் மேல் குத்தி கொலை செய்தார்.

இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றிய போலீசார், ஜான்பால் மற்றும் அவனது நண்பன் தினேஷ் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments