பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து, அவரின் குழந்தையை கால்வாயில் வீசி கொன்ற கொடூரம்

0 1485
பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து, அவரின் குழந்தையை கால்வாயில் வீசி கொன்ற கொடூரம்

பீகாரில் பட்டியலின பெண் ஒருவரை கூட்டு பலாத்காரம் செய்து, அவரின் 5 வயது குழந்தையை அடித்து கால்வாயில் வீசி கொன்ற கொடூரம் அரங்கேறி உள்ளது.

பக்ஸர் மாவட்டத்தில் பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்த கும்பல், அந்த பெண்ணையும், அவரின் 5 வயது குழந்தையையும் தாக்கி கால்வாயில் வீசி சென்றதாக கூறப்படுகிறது.

இதில் தாய் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், குழந்தை உயிரிழந்துவிட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 7 பேரில் 2 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments