மதுரை : அ.தி.மு.க ஊராட்சி தலைவர் உள்ளிட்ட இருவர் வெட்டி படுகொலை

0 6440

மதுரை அருகே அ.தி.மு.க கட்சியை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் வரிச்சியூர் அருகேயுள்ள குன்னத்தூர் கிராமத்தில் அதிமுக கட்சியை சேர்ந்த கிருஷ்ணன் என்பவர் ஊராட்சி மன்ற தலைவராக இருக்கிறார். இவரும் உறவினர் முனுசாமி என்பவரும் நேற்றிரவு , ஒரு வேலையாக சென்று வருவதாக வீட்டில் கூறி விட்டு சென்றுள்ளனர்.  பிறகு வீடு திரும்பவில்லை.

இதனிடையே, இன்று அதிகாலை குன்னத்தூர் மலை அடிவாரத்தில் கிருஷ்ணனும் அவரது உறவினர் முனுசாமி ஆகிய இருவரும் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டு கிடப்பதை பார்த்து ஊர் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

உடனடியாக , கருப்பாயூரணி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து உடலை கைப்பற்றி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். முன் விரோதம் காரணமாகஇந்த இரட்டை கொலை நடந்து இருக்கிறதா? அல்லது வேறு காரணங்கள் ஏதும் இருக்கிறதா என்பது குறித்துபோலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

குன்னத்தூர் மலை அடிவாரம் குற்றவாளிகளுக்கு புகலிடமாக மாறி வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments