வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக நடிகைகள் ராகிணி, சஞ்சனாவிடம் வருமான வரித்துறை விசாரணை நடத்த முடிவு

0 1494
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக நடிகைகள் ராகிணி, சஞ்சனாவிடம் வருமான வரித்துறை விசாரணை நடத்த முடிவு

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதால் நடிகைகள் ராகிணி, சஞ்சனாவிடம் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்த முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

கன்னட திரை உலகில் போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி உள்பட 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் சிறையில் இருக்கும் நடிகைகள் சஞ்சனா மற்றும் ராகிணியிடம் அமலாக்கத்துறையினர் நடத்திய விசாரணையில் இருவரும் தங்களது வருமானத்தை காட்டிலும், அதிகஅளவில் சொத்து சேர்த்திருப்பது தெரிய வந்ததாக கூறப்படுகிறது.

இதுபற்றி தகவல் அறிந்த வருமானவரித்துறையினர் அவர்களிடம் விசாரணை நடத்த முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments