குளிர் காலத்தில் கொரோனா அதிகரிக்கும் ஆபத்து... பண்டிகைகளை வீடுகளுக்குள்ளேயே கொண்டாட அமைச்சர் ஹர்ஷவர்தன் வேண்டுகோள்

0 1143
குளிர் காலத்தில் கொரோனா அதிகரிக்கும் ஆபத்து... பண்டிகைகளை வீடுகளுக்குள்ளேயே கொண்டாட அமைச்சர் ஹர்ஷவர்தன் வேண்டுகோள்

எந்த மதமும், எந்த கடவுளும் ஆடம்பரமான முறையில் பண்டிகைகளை கொண்டாட வேண்டும் என்று கூறவில்லை என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார்.

தமது வழமையான ஞாயிற்றுக்கிழமை டிஜிட்டல் உரையில் பேசிய அவர், பண்டிகைகளை அனைவரும் வீடுகளுக்குள்ளேயே, தங்களுக்கு அன்பானவர்களுடன் சேர்ந்து கொண்டாட வேண்டும் என்று வேண்டுதல் விடுத்துள்ளார்.

குளிர்காலத்தில் கொரோனா வைரசின் வீரியம் அதிகரிக்கும் என்பதால் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அமைச்சர் ஹர்ஷவர்தன் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும் உயிருக்கு ஆபத்து ஏற்படும் விதத்தில் வரும் பண்டிகை காலத்தை கொண்டாடக்கூடாது என்று அவர்  அறிவுறுத்தி உள்ளார்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments