ஹத்ராஸ் பாலியல்-படுகொலை வழக்கில் சிபிஐ விசாரணை துவங்கியது

0 956
ஹத்ராஸ் பாலியல்-படுகொலை வழக்கில் சிபிஐ விசாரணை துவங்கியது

ஹத்ராஸ் பாலியல்-படுகொலை தொடர்பான வழக்கை பதிவு செய்த சிபிஐ தனது விசாரணையை துவக்கியது.

கடந்த 14 ஆம் தேதி தமது சகோதரியை, குற்றம் சாட்டப்பட்டவர்கள் வயலில் வைத்து கழுத்தை நெரித்து கொல்ல முயன்றதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது என்றும், கூட்டுப் பாலியல் மற்றும் கொலைகுற்ற பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் சிபிஐ செய்தித் தொடர்பாளர் ஆர்கே.கவுர் தெரிவித்தார்.

உத்தர பிரதேச அரசின் கோரிக்கை மற்றும் மத்திய அரசு பிறப்பித்த அறிவிக்கையின் படி இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளதாக அவர் கூறினார்.

கடந்த 14 ஆம் தேதி ஹத்ராஸ் மாவட்டத்தில் 4 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி, சித்திரவதை செய்யப்பட்ட இளம்பெண், கடந்த 28 ஆம் தேதி சிகிச்சை பலனின்றி டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments