ராணுவ வீரர்களின் வாகனம் குறித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ட்வீட்

0 1874
ராணுவ வீரர்களின் வாகனம் குறித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் ட்வீட்

புல்லட் புரூஃப் அல்லாத வாகனங்களில் வீரர்கள் பயணித்ததாகக் கூறப்படும் வீடியோ குறித்து ஆய்வு நடத்தப்படும் என சிஆர்பிஎஃப் தெரிவித்துள்ளது.

முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சனிக்கிழமையன்று ஒரு வீடியோவை ட்வீட் செய்திருந்தார்.

அதில், எங்கள் வீரர்கள் புல்லட் புரூப் இல்லாத வாகனங்களில் தியாகிகளாக செல்கிறார்கள்.

ஆனால் பிரதமருக்கு 8 ஆயிரத்து 400 கோடியில் விமானம். இது தான் நியாயமா என பதிவிட்டார்.

இதனைத் தொடர்ந்து வீடியோவின் நம்பகத்தன்மையை சிஆர்பிஎஃப் ஆராய்ந்து வருவதாகவும், தங்களிடம் பல்வேறு செயல்பாட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்ய போதுமான பாதுகாப்பு வாகனங்கள் இருப்பதாகவும் சிஆர்பிஎஃப் டிஐஜி மோசஸ் தினகரன் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments