6 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்: தமிழக அரசு அறிவிப்பு

0 7378
6 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்: தமிழக அரசு அறிவிப்பு

பள்ளிக்கல்வித்துறை ஆணையர் உள்ளிட்ட 6 ஐஏஎஸ் அதிகாரிகள், பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், பள்ளிக்கல்வித்துறை ஆணையராக, என்.வெங்கடேஷ் நியமிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த பதவியில் இருந்த, சிஜி தாமஸ் வைத்தியன், தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தின் மேலாண் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி கோவில், செயல் அலுவலராக கிராந்தி குமார் நியமிக்கப்பட்டுள்ளார். ஈரோடு வணிகவரித்துறை இணை ஆணையராக சரவணனும், டாஸ்மாக் எம்.டி.யாக மோகன் ஐஏஎஸ்சும், தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய மேலாண் இயக்குநராக கிர்லோஸ் குமாரும் நியமிக்கப்படுவதாக, தமிழக அரசு அறிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments