அமெரிக்காவில் விறுவிறுப்புடன் நடைபெற்ற மனைவியை சுமந்து ஓடும் போட்டி...தொடர்ந்து 2வது ஆண்டாக டெலாவேர் தம்பதி வெற்றி

0 523
அமெரிக்காவில் விறுவிறுப்புடன் நடைபெற்ற மனைவியை சுமந்து ஓடும் போட்டி...தொடர்ந்து 2வது ஆண்டாக டெலாவேர் தம்பதி வெற்றி

அமெரிக்காவில் மனைவியை சுமந்து ஓடும் பந்தயத்தில், தொடர்ந்து 2வது ஆண்டாக டெலாவேர் தம்பதி வெற்றி பெற்று சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது.

மைநி மாநிலத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் மனைவியை முதுகில் சுமந்தபடி தண்ணீர் நிரப்பப்பட்ட பள்ளம், மர தடுப்புகள், மணல் குவியல்கள் என பல்வேறு தடைகளை தாண்டி கணவர்கள் ஓடினர்.

16 ஜோடிகள் பங்கேற்ற இந்த போட்டியில், ஜெரோம் , ஒலிவியா தம்பதி 53.85 விநாடிகளில் இலக்கை அடைந்து வெற்றி பெற்றனர்.

மனைவி ஒலிவியாவின் எடைக்கு இணையாக பீர் மற்றும் 5 மடங்கிற்கு இணையாக 570 டாலர் தொகை, அவர்களுக்கு பரிசாக வழங்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments