விழாக்காலங்களில் வெங்காய விலை உயரும் என வணிகர்கள் கணிப்பு

0 3468
வெங்காய வரத்து 40 விழுக்காடு குறைந்துள்ளதால் விழாக்காலங்களில் அதன் விலை உயரும் என வணிகர்கள் தெரிவித்துள்ளனர்.

வெங்காய வரத்து 40 விழுக்காடு குறைந்துள்ளதால் விழாக்காலங்களில் அதன் விலை உயரும் என வணிகர்கள் தெரிவித்துள்ளனர்.

மகாராஷ்டிரம், கர்நாடகம், ஆந்திர மாநிலங்களில் பருவம் தவறிப் பெய்த மழையால் வெங்காயப் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் வேளாண் விளைபொருள் விற்பனைக் குழுச் சந்தைக்கு வெங்காய வரத்து வழக்கத்தைவிட 40 விழுக்காடு குறைந்துள்ளது.

இதன் எதிரொலியாக மொத்த விற்பனைச் சந்தையில் வெங்காயம் ஒரு கிலோ 38 ரூபாய்க்கும், சில்லறை விலையில் ஒரு கிலோ ஐம்பது ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

வெங்காய வரத்து இதேநிலையில் இருந்தால் அதன் விலை நவராத்திரி, தீபாவளி ஆகிய விழாக்காலங்களில் மேலும் கடுமையாக அதிகரிக்கும் என வணிகர்கள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments