ரயில் டிக்கெட் பெற புதிய வசதி..ரயில் புறப்படுவதற்கு 5 நிமிடங்களுக்கு முன்பு கூட இனி டிக்கெட் பெறலாம்..!

0 8454
இன்று முதல் ரயில் புறப்படுவதற்கு 5 நிமிடத்திற்கு முன்பு கூட, பயண டிக்கெட் பெறும் வசதி நடைமுறைக்கு வந்துள்ளது.

இன்று முதல் ரயில் புறப்படுவதற்கு 5 நிமிடத்திற்கு முன்பு கூட, பயண டிக்கெட் பெறும் வசதி நடைமுறைக்கு வந்துள்ளது.

கொரோனா கட்டுப்பாடுகளின் ஒரு பகுதியாக ரயில் புறப்படுவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்பு முன்பதிவு 2வது சார்ட் தயாரிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் பண்டிகை காலத்தை முன்னிட்டு பழைய முறையை மீட்டெடுக்கும் முயற்சியாக, இனி ரயில் புறப்படுவதற்கு அரை மணி நேரத்துக்கு முன்பு தொடங்கி 5 நிமிடத்துக்கு முன்பு வரை 2வது சார்ட் தயாரிக்கப்பட உள்ளது. இந்த இடைப்பட்ட நேரத்தில் காலியாக உள்ள இடங்களுக்கு, ஆன்லைன் அல்லது கவுன்ட்டர்கள் மூலம் பயணிகள் டிக்கெட் பெற்றுக் கொள்ளலாம்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments