பின்லாந்தில் ஒரு நாள் பிரதமரான 16வயது சிறுமி

0 1706
பின்லாந்தில் ஒரு நாள் பிரதமரான 16வயது சிறுமி

பின்லாந்தில் 16வயது சிறுமி ஒருவர் ஒருநாள் பிரதமராக பதவி வகித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். அந்நாட்டின் பிரதமராக சன்னா மரின் என்ற பெண் தலைவர் பதவி வகித்து வருகிறார்.

இந்த நிலையில் வருகிற 11ந்தேதி சர்வதேச பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட உள்ளது. இதனை ஒட்டி 16வயது சிறுமியான ஆவா முர்டோ என்பவரை ஒரு நாள் பிரதமராக ஆக்கி அந்த நாற்காலியில் உட்கார வைத்து அழகுபடுத்தி உள்ளார்.

ஆவா முர்டோவுக்கு சட்டம் இயற்றும் அதிகாரம் வழங்கப்படாதபோதும், தான் பதவி வகித்த அந்த ஒரு நாளில் தொழில்நுட்பத்தில் பெண்களின் உரிமைகளை முன்னிலைப்படுத்த பல்வேறு அரசியல்வாதிகளை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments