ஊரடங்கு தளர்வை தொடர்ந்து கேஸ் இணைப்பு திட்டத்திற்காக குழாய் பதிக்கும் பணிகள் தீவிரம்

0 1416
ஊரடங்கு தளர்வை தொடர்ந்து கேஸ் இணைப்பு திட்டத்திற்காக குழாய் பதிக்கும் பணிகள் தீவிரம்

ஊரடங்கு தளர்வை தொடர்ந்து, சேலத்தில் வீடுகளுக்கு கேஸ் இணைப்பு வழங்கும் திட்டத்திற்காக குழாய் பதிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் மூலம் சேலத்தில் 3 லட்சம் வீடுகளுக்கு குழாய்கள் மூலம் கேஸ் இணைப்பு வழங்க 2ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

கொரோனா பாதிப்பு காரணமாக நிறுத்தப்பட்டிருந்த குழாய் அமைக்கும் பணிகள், தற்போது செவ்வாய்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மீண்டும் தொடங்கி, தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால், வீடுகளில் நாம் உபயோகிக்கும் எரிவாயு அளவுக்கு ஏற்ப கட்டணம் செலுத்தினால் போதுமானது என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments