தமிழ்நாட்டில் இன்று 5088 பேருக்கு கொரோனா உறுதி

0 3374
தமிழ்நாட்டில் இன்று 5088 பேருக்கு கொரோனா உறுதி

தமிழகத்தில், கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டி உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 68 பேர் பலி ஆனார்கள்.

ஒரே நாளில், புதிதாக 5 ஆயிரத்து 88 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆனது. கொரோனா பாதிப்பில் இருந்து மேலும் 5 ஆயிரத்து 718 பேர் குண மடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

சென்னையில் புதிதாக ஆயிரத்து 295 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கோவையில் மேலும் 448 பேருக் கும், செங்கல்பட்டில் புதிதாக 363 பேருக்கும் , திருவள்ளூரில் 194 பேருக்கும் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாநிலத்தில் தனிமைப் படுத்தப் பட்டவர்கள் உள்பட 44 ஆயிரத்து 437 பேர் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments