டவுசர் கொள்ளையனான பள்ளி வேன் ஓட்டுனர்..! மாணவிகள் வீட்டில் கைவரிசை

0 5053
மதுரையில் தனியார் பள்ளி ஒன்றில் வேன் ஓட்டுனராகப் பணிபுரிந்து வந்தவர் நள்ளிரவில் மாணவி ஒருவரது பங்களா வீட்டிற்கு டவுசருடன் திருட வந்து சிசிடிவி காட்சியில் சிக்கியதால் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மதுரையில் தனியார் பள்ளி ஒன்றில் வேன் ஓட்டுனராகப் பணிபுரிந்து வந்தவர் நள்ளிரவில் மாணவி ஒருவரது பங்களா வீட்டிற்கு டவுசருடன் திருட வந்து சிசிடிவி காட்சியில் சிக்கியதால் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மதுரை அண்ணா நகர் பகுதிகளில் அடுத்தடுத்து இரு வீடுகளுக்குள் புகுந்த மர்ம நபர் 44 சவரன் நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்துச்சென்றான்.

அப்போது ஒரு வீட்டில் கிடைத்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், இந்த கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டது முகமூடி அணிந்த டவுசர் கொள்ளையன் என்பதை கண்டுபிடித்தனர்.

இதே நபர் கடந்த 8 மாதங்களுக்கு முன்பாக சோழவந்தான் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ மாணிக்கம் வீட்டில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதையும் சிசிடிவி காட்சிகள் மூலம் ஒப்பிட்டு கண்டறிந்தனர்.

கொள்ளையனை தேடி வந்த காவல்துறையினர். இரவு வேளையில் பாண்டிகோவில் அருகே சந்தேகத்துக்கு இடமான வகையில் சுற்றிய இளைஞரை பிடித்து விசாரித்த போது முன்னுக்கு பின் முரனான தகவல் கொடுத்து வசமாக சிக்கிக் கொண்டான்.

விசாரணையில் அவன் மதுரை சக்கிமங்கலத்தைச் சேர்ந்த பெஞ்சமின் என்பதும், தனியார் பள்ளி ஒன்றில் மாணவிகளை பள்ளிக்கு ஏற்றிச்செல்லும் வேன் ஓட்டுனராக வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது.

வசதியானவர்கள் வசிக்கின்ற குறிஞ்சி குடியிருப்பு பகுதிக்கு மாணவிகளை அழைத்துச் செல்லும் போது அங்குள்ள வீடுகளை நோட்டமிட்டு வந்து நள்ளிரவில் முகமூடி அணிந்து டவுசருடன் வீடு புகுந்து நகை பணத்தை கொள்ளையடிப்பதை வாடிக்கையாக்கி உள்ளான்.

அந்தவகையில் 8 மாதங்களுக்கு முன்பு பூட்டிக்கிடந்த பங்களா வீடு ஒன்றிற்குள் புகுந்து கொள்ளையடிக்க முயன்ற போது அது எம்.எல்.ஏவின் வீடு என தெரிந்ததும் வில்லங்கம் வேண்டாம் என கொள்ளை முயற்சியை கைவிட்டு தப்பியதும் கண்டுபிடிக்கப்பட்டது.

கொள்ளையன் பெஞ்சமினிடம் இருந்து 44 சவரன் நகைகளும் 50 ஆயிரம் ரூபாய் ரொக்க பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது. பகலில் பள்ளி வேன் ஓட்டுனராகவும் இரவில் மாணவிகளின் வீடு புகுந்து கொள்ளையடித்தும் வந்த பெஞ்சமின், பள்ளி வேன்கள் இயக்கப்படாததால் முழு நேரக் கொள்ளையனாக மாறி இருப்பது தெரியவந்தது. பெஞ்சமினை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய காவல் துறையினர் அவனை சிறையில் அடைத்தனர்.

பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்பது போல நீண்ட நாள் கைவரிசை காட்டிய பள்ளி வேன் ஓட்டுனர் திருட்டு வழக்குகளில் போலீசாரிடம் சிக்கி உள்ளது குறிப்பிடதக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments