குரங்குகளிடமிருந்து சுற்றுலா பயணிகளைக் காக்க புதிய யுக்தி: உண்டி வில் மூலம் குரங்குகளை விரட்டும் வனத்துறையினர்

0 843
குரங்குகளிடமிருந்து சுற்றுலா பயணிகளைக் காக்க புதிய யுக்தி: உண்டி வில் மூலம் குரங்குகளை விரட்டும் வனத்துறையினர்

சீனாவில் குரங்குகளிடமிருந்து சுற்றுலாப் பயணிகளைக் காப்பாற்ற உண்டிவில் மூலம் தாக்குதல் நடத்தும் திட்டத்தை வனத்துறையினர் கையாண்டு வருகின்றனர்.

ஹூனான் மாகாணத்தில் உள்ள விலங்கியல் பூங்கா ஒன்றில் உள்ள குரங்குகள் சுற்றுலா பயணிகள் வைத்திருக்கும் பொருட்களை அபகரிப்பதும், அவர்களைத் தாக்குவதும் தொடர்கதையாகி வந்தது.

இந்நிலையில் சில குரங்குகள் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு உயிரியல் ஆர்வலர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து உண்டிவில் மூலம் குரங்குகளைத் தாக்கும் முறையை சீன வனத்துறை அதிகாரிகள் கையிலெடுத்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments