கோவை, நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

0 1345
கோவை, நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக ,அடுத்த 48 மணி நேரத்திற்கு கோவை நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தமானை ஒட்டியுள்ள  பகுதியில்   அக்டோபர் 9 ஆம் தேதி ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு  பகுதி  உருவாகக்கூடும். 

அது அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு பெறக்கூடும். வரும் 9,10 மற்றும் 11 ஆம் தேதிகளில் கிழக்கு மற்றும் மேற்கு வங்க கடற்பகுதிகளில் சூறாவளிக்காற்று வீசும் என்பதால் மீனவர்கள் செல்ல வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்,  ஆழ்கடல் பகுதியில் இருக்கும் மீனவர்கள் 8 ஆம் தேதிக்குள் கரை திரும்புமாறு  அறிவுறுத்தப்படுகிறார்கள். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments