2021 சட்டப்பேரவை தேர்தலுக்கான அதிமுக முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

0 13896
2021 சட்டப்பேரவை தேர்தலுக்கான அதிமுக முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும் கட்சியை வழி நடத்த 11 பேர் கொண்ட குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவில் சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக யார் முன்னிறுத்தப்படுவார்? என்பது தொடர்பாக கடந்த சில தினங்களாக அக்கட்சி தீவிரமாக ஆலோசனை மேற்கொண்டது.

கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் தனித்தனியே ஆலோசனையில் ஈடுபட்டனர். இன்று அதிகாலை வரை நீடித்த ஆலோசனையில் சுமூக முடிவு எட்டப்பட்டது. பின்னர் இருவரும் ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு புறப்பட்டனர்.

இதேபோல் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், கட்சி நிர்வாகிகள் கட்சி அலுவலகத்திற்கு வந்து சேர்ந்தனர். ஏராளமான தொண்டர்களும் கட்சி அலுவலகத்தில் திரண்டனர். இந்நிலையில் காலை 10 மணியளவில் அதிமுக தலைமையகத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கட்சியை வழிநடத்த 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவை அறிவித்தார்.

பின்னர் பேசிய ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், 2021ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலுக்கான முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை மகிழ்ச்சியுடன் அறிவிப்பதாக கூறினார்.

இதையடுத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துணை முதலமைச்சர் ஓபிஎஸ்சுக்கு சால்வை அணிவித்தார். இதே போல் ஓபிஎஸ், எடப்பாடி பழனிசாமிக்கு சால்வை மற்றும் பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினார்.

தொடர்ந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓபிஎஸ் மற்றும் அமைச்சர்கள், ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆர் நினைவிடங்களில் மரியாதை செலுத்தினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments