அதிமுகவில் 11பேர் கொண்ட வழிகாட்டுதல் குழு அமைப்பு..!

0 6953
2021ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அதிமுக முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டுள்ளார்.

2021ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அதிமுக முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டுள்ளார்.

முதலமைச்சர் வேட்பாளர் மற்றும் அதிமுக வழிகாட்டுதல் குழுவை தேர்வு செய்வதற்கான ஆலோசனை இன்று அதிகாலை மூன்றரை மணி வரை நீடித்தது. முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் இல்லங்களில் நடைபெற்ற ஆலோசனைகளை தொடர்ந்து இன்று காலை பத்து மணிக்கு நல்ல செய்தி வரும் என்று அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் கூறினார். மேலும் காலையில் இருந்தே அதிமுக தொண்டர்கள் அக்கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு வர ஆரம்பித்தனர்.

காலை ஒன்பது மணி அளவில் மூத்த அமைச்சர்கள், அதிமுக எம்பிக்கள், எம்எல்ஏக்களும் அதிமுக தலைமையகம் வந்தனர். அதே நேரத்தில் துணை முதலமைச்சர் ஓபிஎஸ் தனது வீட்டில் இருந்து புறப்பட்டு அதிமுக தலைமையகம் வந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 

தொடர்ந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் தனது வீட்டில் இருந்து அதிமுக தலைமையகம் புறப்பட்டார். வழிநெடுகிலும் அவருக்கு அதிமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அதிமுக தலைமையகம் வந்த பிறகு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓபிஎஸ் இணைந்து செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அதிமுகவை வழிநடத்த 11பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக கூறி அவர்களின் பெயர்களை வெளியிட்டார்.

பின்னர் பேசிய துணை முதலமைச்சரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓபிஎஸ், 2021ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலுக்கான முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை மகிழ்ச்சியுடன் அறிவிப்பதாக கூறினார்.

முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அதிமுக தலைமையகம் மற்றும் வெளியே கூடியிருந்தவர்கள் உற்சாக முழக்கமிட்டனர். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துணை முதலமைச்சர் ஓபிஎஸ்சுக்கு சால்வை அணிவித்தார். இதே போல் துணை முதலமைச்சர் ஓபிஎஸ், முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமிக்கு சால்வை மற்றும் பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினார்.

தொடர்ந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓபிஎஸ் மற்றும் அமைச்சர்கள் ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆர் நினைவிடங்களில் மரியாதை செலுத்தினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments