ஹத்ராஸ் சம்பவத்தை முன்வைத்து வன்முறையை தூண்ட சதி செய்ததாக 4 பேர் கைது

0 5206
ஹத்ராஸ் சம்பவத்தை முன்வைத்து வன்முறையை தூண்ட சதி செய்ததாக 4 பேர் கைது

ஹத்ராஸ் கூட்டு பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை சம்பவத்தை வைத்து வன்முறையை தூண்ட திட்டமிட்டிருந்ததாக மதுராவில் கைது செய்யப்பட்ட 4 பேரும் பாப்புலர் பிரான்ட் ஆப் இந்தியா (Popular Front of India) அமைப்புடன் தொடர்பு கொண்டவர்கள் என உத்தர பிரதேச போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஹத்ராசில் தலித் சமூக இளம்பெண் அண்மையில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதில் பலத்த காயமடைந்து உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து விசாரிக்கும் போலீசார்,  டெல்லியிலிருந்து ஹத்ராஸ் நோக்கி காரில் வந்த 4 பேரை மதுரா சுங்கச்சாவடியில் மடக்கி கைது செய்தனர்.

4 பேரும் பாப்புலர் பிரான்ட் ஆப் இந்தியா அமைப்போடு தொடர்பு கொண்டவர்கள் எனவும், அவர்களிடம் இருந்து செல்போன்கள், லேப் டாப்புகள், உத்தர பிரதேசத்தில் அமைதி, ஸ்திரத்தன்மையை சீர்குலைக்கும் வாசகங்கள் அடங்கிய பத்திரிகைகள் கைப்பற்றப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments