தமிழக சட்டமன்றத்தை உடனடியாகக் கூட்டுமாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம்

வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றிட, சட்டமன்றத்தை உடனடியாகக் கூட்டுமாறு வலியுறுத்தி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
மத்திய அரசின் வேளாண் சட்டங்கள், தமிழக விவசாயிகள் மத்தியிலும் மிகப்பெரிய அதிருப்தி - எதிர்ப்பு அலைகளை உருவாக்கியிருப்பதாக அதில் குறிப்பிட்டுள்ளார்.
அரசமைப்புச் சட்ட பிரிவுகளின்படி பார்த்தால், வேளாண்மையைப் பொறுத்தமட்டில், சட்டமியற்றும் அதிகாரம் மாநில அரசுகளுக்கே இருப்பதாகவும், இந்த அதிகாரத்திற்குள் நுழைந்து மத்திய அரசு சட்டமியற்றியிருப்பதை ஏற்றுக் கொள்ள இயலாது என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
மாநிலப் பட்டியலில் உள்ள வேளாண்மைக்கான சட்டங்களை இயற்ற மாநில அரசுகளுக்கே அதிகாரம்!
— M.K.Stalin (@mkstalin) October 6, 2020
மத்திய அரசின் விவசாயிகள் விரோத வேளாண் சட்டங்களை எதிர்த்து உடனடியாக சட்டமன்றத்தைக் கூட்டி @CMOTamilNadu தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்!
தமிழக அரசு உச்சநீதிமன்றத்திலும் வழக்குத் தொடர வேண்டும்! pic.twitter.com/0TB8RAsiEW
Comments