மலேசியாவில் அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி - தன்னை சுய தனிமைப்படுத்திக் கொண்ட பிரதமர்

0 359
மலேசியாவில் அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி - தன்னை சுய தனிமைப்படுத்திக் கொண்ட பிரதமர்

மலேசியாவில் அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பிரதமர் முஹைதீன் யாசின், சுய தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

கடந்த 3 ஆம் தேதி மத விவகாரத்துறை அமைச்சர் சுல்கிஃப்லி முகமது அல்-பக்ரியுடன் பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் பிரதமர் பங்கேற்றிருந்த நிலையில், சுல்கிஃப்லிக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, பரிசோதனையில் கொரோனா பாதிப்பு இல்லை என்று உறுதி செய்யப்பட்ட போதிலும், தன்னை 14 நாட்களுக்கு தனிமைப்படுத்திக் கொள்வதாக 73 வயதான பிரதமர் முஹைதீன் அறிவித்துள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments