இந்தியா-அமெரிக்கா இடையே 2+2 பேச்சுவார்த்தை: ஆயுதந் தாங்கிய விமானங்களை வாங்குவதற்கு வழிசெய்யும் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்ப்பு

0 914
இந்தியா-அமெரிக்கா இடையே 2+2 பேச்சுவார்த்தை: ஆயுதந் தாங்கிய விமானங்களை வாங்குவதற்கு வழிசெய்யும் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்ப்பு

பாதுகாப்புத்துறையில் இந்தியா-அமெரிக்கா இடையேயான ஒத்துழைப்பு முழுமையாக்கும் 4ஆவது அடிப்படையான ஒப்பந்தம் வரும் 26 மற்றும் 27ஆம் தேதி பேச்சுவார்த்தைக்குப் பிறகு கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கெனவே 3 அடிப்படையான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி விட்டது. பாதுகாப்பு மற்றும் வெளியுறவு அமைச்சர்கள் மட்டத்திலான டூ பிளஸ் டூ பேச்சுவார்த்தையை தொடர்ந்து, BECA ஒப்பந்தம் கையெழுத்தாகலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவிடம் இருந்து, ப்ரீடேட்டர் பி எனக் குறிப்பிடப்படும் MQ-9B ஆளில்லா ஆயுதந் தாங்கிய விமானங்களை வாங்குவதற்கு இந்த ஒப்பந்தம் முக்கியமானதாகும். எதிரிகளின் இலக்குகளை துல்லியமாக கண்டறிந்து தாக்குதல் நடத்துவதற்கு இத்தகைய ஆளில்லா ஆயுதந் தாங்கிய விமானங்கள் பயன்படுகின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments