புதிய வேளாண் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதை நிறுத்தி வைக்க காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் புதிய மசோதா

0 1015
புதிய வேளாண் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதை நிறுத்தி வைக்க காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் புதிய மசோதா

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களைத் தங்கள் மாநிலங்களில் நடைமுறைப்படுத்துவதை நிறுத்தி வைக்க காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் புதிய மசோதாவை நிறைவேற்ற உள்ளன.

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்க்கும் காங்கிரஸ் கட்சி தனது ஆட்சியில் உள்ள மாநில அரசுகளுக்குப் புதிய வரைவு மசோதாவை அனுப்பியுள்ளது. உழவர் உரிமை மற்றும் சிறப்புப் பாதுகாப்பு மசோதா எனப்படும் இந்த வரைவு மசோதாவின்படி மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை எப்போது நடைமுறைப்படுத்துவது என்பதை மாநில அரசுகள் தீர்மானிக்க முடியும்.

குறைந்தபட்ச ஆதரவு விலைக்கும் குறைவான விலைக்கு விளைபொருட்களைத் தனியார் கொள்முதல் செய்வதையும் தடுக்க முடியும் எனக் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments