சந்தையில் பரவிய தீ ...அணைத்தும் அணையாத நெருப்பு

0 453
சந்தையில் பரவிய தீ ...அணைத்தும் அணையாத நெருப்பு

மும்பையின் பிரசித்தி பெற்ற அப்துல் ரகுமான் தெருவில் உள்ள ஒரு சந்தையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

ஞாயிற்றுக்கிழமை இரவு பிடித்த தீ அணைக்கப்பட்ட போதும் நீறு பூத்த நெருப்பாக புகைந்தபடி இருந்து மீண்டும் தீப் பிடித்தது. பத்துக்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன.

வீரர்கள் பலமணி நேரமாகப் போராடி அணையாமல் கிடந்த நெருப்பை அணைத்தனர். இந்த விபத்தில் பெரும் பொருட்சேதம் ஏற்பட்ட போதும் யாருக்கும் காயம் இல்லை என்று தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments