நாளை மாலை ஆளுநரை சந்திக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி

0 2613
நாளை மாலை ஆளுநரை சந்திக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி

ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை, ஆளுநர் மாளிகையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நாளை மாலை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த சந்திப்பின் பொது, தமிழகத்தில் எடுக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் குறித்து ஆளுநரிடம் முதலமைச்சர் விளக்குவார் என கூறப்படுகிறது.

கொரோனா ஊரடங்கில் இருந்து விலகும் காலகட்டம் தொடர்பாக பிரதமர் மோடி மற்றும் மாவட்ட ஆட்சியர்களுடன் நடந்த ஆலோசனைகள், அவற்றின் அடிப்படையில் தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் ஆகியன குறித்து எடப்பாடி பழனிச்சாமி விளக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதலமைச்சருடன் சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர், தலைமைச் செயலர் சண்முகம், சுகாதாரத்துறை முதன்மைச் செயலர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரும் ஆளுநர் சந்திப்பில் பங்கேற்கின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments