ஆந்திராவில் 10 கி.மீ தூரம் டோலி கட்டித் தூக்கிச் செல்லப்பட்ட கர்ப்பிணிப் பெண்

0 2603
ஆந்திராவில் 10 கி.மீ தூரம் டோலி கட்டித் தூக்கிச் செல்லப்பட்ட கர்ப்பிணிப் பெண்: மருத்துவம், சாலை, வாகன வசதிகளின்றி தவிக்கும் மலைக்கிராம மக்கள்

ஆந்திராவில் மலைவாழ் மக்கள், கர்ப்பிணிப் பெண்ணை சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் டோலி கட்டித் தூக்கிச் சென்ற காட்சிகள் வெளியாகியுள்ளன.

விஜயநகரம் மாவட்ட மலை கிராமங்களில் வசித்து வரும் நூற்றுக்கணக்கான மக்களுக்குத் தேவையான சாலை வசதி, மருத்துவ வசதி உள்ளிட்டவை இல்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், சுங்கவரப்பு பேட்டை பகுதியிலிருந்து கர்ப்பிணிப் பெண் ஒருவரை பிரசவத்துக்காக அவரது கணவர் உட்பட உறவினர்கள் டோலி கட்டி தூக்கிச் சென்றுள்ளனர்.

சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள டப்பாகுண்டா கிராமம் வரை கரடுமுரடான மலைப்பாதையில் தூக்கிச் சென்று அங்கிருந்து ஆம்புலன்சில் அனுப்பி வைத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments