பீகார் தேர்தல் தொடர்பாக அமித் ஷா-நட்டா உள்ளிட்டோர் முக்கிய ஆலோசனை

0 901
பீகார் தேர்தல் தொடர்பாக அமித் ஷா-நட்டா உள்ளிட்டோர் முக்கிய ஆலோசனை

பீகார் தேர்தலில் ஆளும் கூட்டணியில் தொகுதி பங்கீடு பற்றிய இழுபறி நீடிக்கும் நிலையில், உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் நட்டாவை அவரது வீட்டில் சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தினார்.

அதில் பீகார் துணை முதலமைச்சர் சுசில் குமார் மோடி மற்றும் கட்சி பொறுப்பாளர்கள் பங்கேற்றனர். 243 தொகுதிகள் உள்ள பீகார் சட்டப்பேரவைக்கு முதல் கட்டமாக 71 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு வரும் 28 ஆம் தேதி நடக்கிறது.

இந்த தேர்தலில் பாஜகவும், ஐக்கிய ஜனதா தளமும் 50 க்கு 50 என்ற விகித த்தில் போட்டியிட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. 234 இடங்களில் பாஜக 121 தொகுதிகளிலும், ஐக்கிய ஜனதா தளம் 122 தொகுதிகளிலும் போட்டியிடலாம் என சொல்லப்படுகிறது.

பாஜகவுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் இருந்து ராம் விலாஸ் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சிக்கு இடங்களை ஒதுக்கலாம் என முடிவு செய்யப்பட்டாலும் அதை ஏற்க அந்தக்கட்சி தயாராக இல்லை என கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments