நடிகை சனம் செட்டி அளித்த புகாரின்பேரில் பிக்பாஸ் தர்ஷன் மீது 3 பிரிவுகளின்கீழ் போலீசார் வழக்குப்பதிவு

0 3260
நடிகை சனம் செட்டி அளித்த புகாரின்பேரில் பிக்பாஸ் தர்ஷன் மீது 3 பிரிவுகளின்கீழ் போலீசார் வழக்குப்பதிவு

திருமணம் செய்வதாக கூறி 2 ஆண்டுகளாக காதலித்து நிச்சயம் செய்துவிட்டு ஏமாற்றியதாக நடிகை சனம் செட்டி அளித்த புகாரின்பேரில் பிக்பாஸ் தர்ஷன் மீது போலீசார் 3 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தனியார் தொலைக்காட்சியின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அறிமுகமாகி பிரபலமான தர்ஷன் மீது சென்னை அடையாறை சேர்ந்த நடிகை சனம் செட்டி பல்வேறு புகார் தெரிவித்திருந்தார்.

15 லட்சம் ரூபாய் வாங்கி விட்டு ஏமாற்றியதாகவும் அவர் கூறியிருந்தார்.

இதுகுறித்து அவர் தொடுத்த வழக்கு மீது சைதாப்பேட்டை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் தர்ஷன் மீது அடையாறு மகளிர் காவல்நிலையத்தில் , பெண் வன்கொடுமை சட்டம், மோசடி உள்ளிட்ட 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments