தமிழ்நாடு மற்றும் ஆந்திராவில் 70 சதவீதம் பேர் கொரோனாவைப் பரப்பவில்லை -புதிய ஆய்வு முடிவு

0 5150
தமிழ்நாடு மற்றும் ஆந்திராவில் 70 சதவீதம் பேர் கொரோனாவைப் பரப்பவில்லை -புதிய ஆய்வு முடிவு

கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 70 சதவீதம் பேர் மூலம் அடுத்தவர்களுக்கு வைரஸ் பரவவில்லை என்று தமிழ்நாடு மற்றும் ஆந்திராவில் நடைபெற்ற ஆய்வுகள் உறுதி செய்துள்ளன.

Centre for Disease, Dynamics and Economic Policy  என்ற அமெரிக்க அமைப்பு ஒன்று இந்த ஆய்வை மேற்கொண்டது. ஆய்வின் முடிவுகள் கடந்த மாதம் 30ம் தேதி சயன்ஸ் என்ற அமெரிக்க இதழில் வெளியிடப்பட்டுள்ளன.

தமிழ்நாடு, ஆந்திராவில் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு நோய்த் தொற்று பரவியது குறித்து அவர்கள் ஆய்வு நடத்தினர். சமூகப் பரவல் என்பது இரண்டு புள்ளி ஆறு சதவீதமே என்றும் குடும்ப உறுப்பினர்கள் மூலம் வைரஸ் பரவியது 9 சதவீதம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெறும் எட்டு சதவீதம் பேர் மட்டுமே நோயைப் பரப்ப காரணமாக இருந்துள்ளனர். அவர்களால் 60 சதவீதம் பேர் எந்த அறிகுறிகளுமின்றி புதிதாக கொரோனா பாதிப்புக்கு ஆளாகியிருப்பதும் தெரிய வந்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments