பீகார் சட்டமன்றத் தேர்தலில் ராஷ்டிரிய ஜனதாதளம், காங்கிரஸ், இடதுசாரிக் கட்சிகள் கூட்டணி அமைத்துப் போட்டி

0 802
பீகார் சட்டமன்றத் தேர்தலில் ராஷ்டிரிய ஜனதாதளம், காங்கிரஸ், இடதுசாரிக் கட்சிகள் கூட்டணி அமைத்துப் போட்டி

பீகாரில் ராஷ்டிரிய ஜனதா தளம் 144 தொகுதிகளிலும், காங்கிரஸ் 70 தொகுதிகளிலும் போட்டியிடுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

பீகார் சட்டமன்றத் தேர்தலில் ராஷ்டிரிய ஜனதாதளம், காங்கிரஸ், இடதுசாரிக் கட்சிகள் ஆகியவை கூட்டணி அமைத்துப் போட்டியிட உள்ளன. இந்தக் கூட்டணியில் கட்சிகளுக்கான தொகுதிப்பங்கீடு இறுதி செய்யப்பட்டதை அடுத்து தேஜஸ்வி யாதவ், அவினாஷ் பாண்டே ஆகியோர் கூட்டாக அறிவித்தனர்.

அதன்படி ராஷ்டிரிய ஜனதாதளம் 144 தொகுதிகளிலும், காங்கிரஸ் 70 தொகுதிகளிலும் போட்டியிடும். சிபிஐ எம்எல் 19 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்திய கம்யூனிஸ்ட் 6 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 4 இடங்களிலும் போட்டியிடுகின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments