போதை பொருள் வழக்கில் நடிகைகளின் ரத்த, முடி மாதிரிகளை திருப்பி அனுப்பியது ஐதராபாத் தடயவியல் ஆய்வகம்

0 1466

போதைப்பொருள் பயன்படுத்தியதை கண்டறிய அனுப்பப்பட்ட நடிகைகளின் முடி, ரத்த மாதிரியை ஐதராபாத் தடயவியல் ஆய்வகம் திருப்பி அனுப்பி உள்ளது.

போதை பொருள் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி போதைப்பொருட்கள் பயன்படுத்தினார்களா? என்பதை கண்டறிய, அவர்களது ரத்த மாதிரி, சிறுநீர், முடி, செல்போன்கள் உள்ளிட்டவை ஐதராபாத்தில் உள்ள தடயவியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டது.

ரத்த மாதிரி, முடியை தடயவியல் ஆய்வகம் பெங்களூருவுக்கு திருப்பி அனுப்பி வைத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அவற்றை முறையான பாதுகாப்புடன் அனுப்பவில்லை என்று கூறப்படுகிறது. பாதுகாப்பான முறையில் அனுப்பும்படி போலீசாருக்கு, தடயவியல் நிபுணர்கள் தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments