ஹத்ராஸ் கிராம எல்லைகள் இரு நாட்களுக்கு பின்னர் மீண்டும் திறப்பு

0 915
ஹத்ராஸ் கிராம எல்லைகள் இரு நாட்களுக்கு பின்னர் மீண்டும் திறப்பு

உத்தரபிரதேசத்தில் தலித் பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட ஹத்ராஸ் கிராமத்தின் எல்லைகள் இரு நாட்களுக்கு பின்னர் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.

பத்திரிகையாளர்கள் மட்டுமே கிராமத்திற்குள் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அரசியல் தலைவர்கள் செல்வதற்கு அனுமதியில்லை எனவும் இணை ஆட்சியர் பிரேம் பிரகாஷ் மீனா தெரிவித்துள்ளார்.

மேலும் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் வகையிலேயே ஹத்ராசில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினரை வீட்டிலேயே சிறை வைத்திருப்பதாகவும், அவர்களது செல்போன்கள் பறிக்கப்பட்டதாகவும் எழுந்த குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை எனவும் அவர் மறுத்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments