அமெரிக்க அதிபர் டிரம்ப், தாம் நல்ல உடல்நலத்துடன் இருப்பதாக டிவிட்டரில் வீடியோ வெளியீடு

0 792
அமெரிக்க அதிபர் டிரம்ப், தாம் நல்ல உடல்நலத்துடன் இருப்பதாக டிவிட்டரில் வீடியோ வெளியீடு

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், தாம் நல்ல உடல்நலத்துடன் இருப்பதாக டிவிட்டரில் வெளியிட்ட வீடியோ மூலம் தெரிவித்துள்ளார்.

தம்மால் நன்கு வேலை செய்ய முடிவதாகவும், வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட தனது மனைவி மெலானியாவும் நல்ல உடல்நலத்துடன் இருப்பதாகவும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

மருத்துவர்களின் ஆலோசனைப்படி மேரிலாண்டில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு டிரம்ப் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அவருக்கு லேசாக காய்ச்சல் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த சில நாட்களுக்கு மருத்துவமனையில் இருந்தே அவர் தமது பணிகளை கவனிப்பார் என்றும் வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

இதனிடையே அதிபர் டிரம்ப் விரைவில் குணமடைய வேண்டும் என்று பிரதமர் மோடி தமது டிவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments