ஏர் இந்தியா விமானங்கள் ஹாங்காங் செல்ல விதிக்கப்பட்ட தடை நீக்கம்!

0 842
ஏர் இந்தியா விமானங்கள் ஹாங்காங் செல்ல விதிக்கப்பட்ட தடை நீக்கம்

ஏர் இந்தியா விமானங்களுக்கு விதித்துள்ள தடையை ஹாங்காங் விலக்கிக் கொண்டதால் அக்டோபர் 4 முதல் டெல்லி - ஹாங்காங் இடையே விமானம் இயக்கப்பட உள்ளது.

ஏர் இந்தியா விமானத்தில் வந்த பயணிகளுக்கு கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதால் செப்டம்பர் 20 முதல் தடை விதிக்கப்பட்டது.

இந்தத் தடை வரும் சனிக்கிழமை முடிவடைகிறது.

இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை டெல்லியில் இருந்து ஹாங்காங்குக்கு விமானம் இயக்கப்பட உள்ளதாக ஏர் இந்தியா அறிவித்துள்ளது.

செப்டம்பர் 21ஆம் நாள் செல்வதற்கு முன்பதிவு செய்திருந்தவர்களுக்கு இந்த விமானத்தில் இடமளிக்கப்படும் என்றும் ஏர் இந்தியா தெரிவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments