கனடாவில் சாலையோரம் இருந்த மின்கம்பத்தில் சிறு குழந்தை போல முதுகைச் சொறிந்த அரிய வகை கரடி

0 937
கனடாவில் சாலையோரம் இருந்த மின்கம்பத்தில் சிறு குழந்தை போல முதுகைச் சொறிந்த அரிய வகை கரடி

கனடாவில் சாலையோரம் வந்த கரடி ஒன்று அரிப்பு தாளாமல் சிறு குழந்தை போல அருகில் இருந்த மின்கம்பத்தில் முதுகைச் சொறிந்து கொண்டது.

பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியில் வாழும் அரிய வகையைச் சேர்ந்த கெர்மோட் வகை கரடி ஒன்று சாலையோரம் வந்தது.

அங்குமிங்கும் மேய்ந்து திரிந்த அந்தக் கரடி திடீரென அருகில் இருந்த மின்கம்பத்தின் முன்னால் நின்று ஒற்றைக் கையால் கம்பத்தைப் பிடித்தபடி சுகமாக சொறிந்து கொண்டது.

அப்போது அந்தக் கரடி சிறு குழந்தை நடனம் ஆடுவதைப் போல இருந்ததாக அதனைக் கண்டவர்கள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments