தமிழகத்தின் 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

0 6774
தமிழகத்தின் 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

அடுத்த 24 மணி நேரத்தில் வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், கடலோர மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்த வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடப்பு ஆண்டில் தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை 24 சதவிகிதம்  அதிகமாக பெய்துள்ளதாக வானிலை அதிகாரிகள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments