அரசு மருத்துவமனை அலட்சியம்; சிகிச்சையில் இருப்பவர் இறந்ததாகக்கூறி அனுப்பி வைக்கப்பட்ட சடலம்

0 4125
அரசு மருத்துவமனை அலட்சியம்; சிகிச்சையில் இருப்பவர் இறந்ததாகக்கூறி அனுப்பி வைக்கப்பட்ட சடலம்

கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்தவர் உயிருடன் உள்ள நிலையில், அவர் இறந்ததாகக் கூறி மற்றொரு நபரின் சடலத்தை  அனுப்பிவைத்துள்ளனர்.

தொட்டியத்தைச் சேர்ந்த கொளஞ்சி கொரோனா  சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டார். அதே நேரத்தில் திருக்கோவிலூரைச் சேர்ந்த பாலர் என்பவரும் அங்கு சிகிச்சைக்கு வந்த சிறிது நேரத்தில் உயிரிழந்துள்ளார்.

image

ஆனால் இறந்தது கொளஞ்சி என நினைத்து பாலரின் சடலத்தை கொளஞ்சி வீட்டுக்கு அனுப்பியுள்ளனர். அங்கு அது கொளஞ்சியின் சடலம் அல்ல என்பதை அறிந்து, சிகிச்சையிலிருந்த கொளஞ்சியை போனில் தொடர்பு கொண்டு பேசியவர்கள் அவர் உயிரோடிருப்பதைத் தெரிந்து கொண்டனர். இதையடுத்து தகவலின் பேரில் பாலரின் சடலத்தை மருத்துவமனை நிர்வாகம் எடுத்துச் சென்றது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments