இந்தியாவில் 10 வயதுக்கு மேற்பட்ட 15 நபர்களில் ஒருவர், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருக்கலாம் - ICMR

0 1791
இந்தியாவில் 10 வயதுக்கு மேற்பட்ட 15 நபர்களில் ஒருவர், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருக்கலாம் - ICMR

இந்தியாவில் ஆகஸ்ட் மாதம் வரை 10 வயதுக்கு மேற்பட்ட 15 நபர்களில் ஒருவர், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதுதொடர்பான அறிக்கையில், கணிசமான மக்கள் தொகை இன்னமும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவதாகவும், நோய்த்தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு மற்றும் கட்டுப்பாட்டு நெறிமுறைகள் நோய்த்தொற்று பரவலை தடுக்க உதவியுள்ளதாகவும், ஊரக பகுதிகளோடு ஒப்பிடுகையில் நகர்புற குடிசைப்பகுதிகளில் தொற்று ஏற்பட 4 மடங்கு அபாயம் இருப்பதாகவும், ஐசிஎம்ஆர் ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments