சஞ்சய் ராவத் அவதூறாக பேசியதாக கூறப்படும் வீடியோ - கங்கனா ரணாவத் தாக்கல் செய்ய உத்தரவு

0 722
சஞ்சய் ராவத் அவதூறாக பேசியதாக கூறப்படும் வீடியோ - கங்கனா ரணாவத் தாக்கல் செய்ய உத்தரவு

சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் வசைபாடி பேட்டியளித்ததாக கூறப்படும்  வீடியோ, ட்விட்டர் பதிவுகளை சமர்ப்பிக்கும்படி இந்தி நடிகை கங்கனா ரணாவத்துக்கு மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தனது திரைப்பட தயாரிப்பு நிறுவன கட்டிடத்தின் ஒரு பகுதியை இடித்ததற்கு மும்பை மாநகராட்சியிடம் 2 கோடி இழப்பீடு கேட்டு கங்கனா வழக்குத் தொடுத்துள்ளார்.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, கங்கனாவை சஞ்சய் ராவத் அவதூறாக  பேசி பேட்டியளித்ததாக குற்றம்சாட்டி, அவரது வழக்கறிஞர் ஒரு வீடியோவை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

5ம் தேதி ட்விட்டரில் தன்னை பற்றிய அவதூறு பதிவுகளை ரீட்வீட் செய்ததாகவும் தெரிவித்தார்.  அப்போது ராவத்தின் வழக்கறிஞர், கங்கனாவின் பெயரை சஞ்சய் குறிப்பிடவில்லை என்றார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments