உத்ரகாண்ட், இமாச்சல பிரதேச மாநிலங்களில் உள்ள சுடுநீர் ஊற்றுகளின் மூலம் மின்னுற்பத்தி செய்ய திட்டம்

0 1441
உத்ரகாண்ட் மற்றும் இமாச்சல பிரதேச மாநிலங்களில் உள்ள சுடுநீர் ஊற்றுகளின் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

உத்ரகாண்ட் மற்றும் இமாச்சல பிரதேச மாநிலங்களில் உள்ள சுடுநீர் ஊற்றுகளின் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய  டெகராடூனில் உள்ள வாடியா  இமாலய புவியியல் நிறுவன இயக்குநர் காலாசந்த், உத்ரகாண்டில் 40 ஊற்றுகளும், இமாச்சலபிரதேசத்தில் 35 ஊற்றுகளும் அடையாளம் காணப்பட்டுள்ளன என்றார்.

இந்த ஊற்றுகள் மிகுந்த வெப்பத்துடன் நீரை பீய்ச்சி அடிக்கும் நிலையில், அவற்றை கொண்டு டைர்பனை சுற்ற வைத்து மின்னுற்பத்தி செய்ய திட்டமிட்டு உள்ளதாகவும், 135 கோடி ரூபாய் செலவில் Chamoli என்ற இடத்தில் இந்த ஆண்டு இறுதிக்குள் மின்னுற்பத்தி ஆலை அமைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

சுடுநீர் ஊற்றுகளின் மூலம் மின் உற்பத்தி செய்ய ஒரு யூனிட்டிற்கு 4 முதல் 5 ரூபாய் 50 காசுகள் மட்டுமே செலவாகும் என்றும் அடுத்த 20 ஆண்டுகளுக்கு தினமும் 5 மெகவாட் மின்சாரம் வீதம் உற்பத்தி செய்யலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments